March 14, 2026

உறுப்பு தானத்தில் ஒரு புதிய உலக சாதனையை செய்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை!

0
IMG_8835

சென்னைஆகஸ்ட்  2025: 2016 ஆம் ஆண்டில்ஒரே நாளில்அதிக எண்ணிக்கையிலானோர் உறுப்பு தானம் செய்யமுன்வந்ததற்கான கின்னஸ் உலக சாதனையை படைத்ததுதமிழகத்தின் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னணிமருத்துவமனைகளில் ஒன்றான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையால் நடத்தப்படும் இந்தபல்நோக்கு மருத்துவமனைதற்போது உறுப்பு தானம் சம்மந்தமானமற்றுமொரு சிறப்பான சாதனையை செய்து உறுப்புதானத்தில்உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் மூன்று மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்புதான உறுதிமொழிகளைப் பெற்றதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணாமருத்துவமனை ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. 2025பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 45,861 பேரிடமிருந்துஉறுப்புதான உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இந்த முயற்சிக்கு  வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் (World Records Union) அமைப்புஅதிகாரப்பூர்வ சான்றளித்துள்ளது.

இந்த சாதனைக்கான சான்றிதழ்ஆகஸ்ட் 8, 2025,வெள்ளிக்கிழமை அன்று சென்னை ITC கிராண்ட் சோழாஹோட்டலில் நடைபெற்ற சிறப்பு விழாவில் மருத்துவமனைநிர்வாகத்திடம் வழங்கப்பட்டதுவேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியனின்பிரதிநிதிகளான திருமதி. ஆலிஸ் ரேனாட் மற்றும் சாதனைஅதிகாரி திருமதி. ஷரீஃபா ஹனீஃப் ஆகியோர்எஸ்.என்.ஆர்சன்ஸ்அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. R. சுந்தர்அவர்களிடம் லக சாதனைச  ான்றிதழை வழங்கினர்.

இந்நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு அரசின் உறுப்புப் மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தின் செயலர் திரு. N. கோபாலகிருஷ்ணன்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.அவர்கள முன்னிலையில் இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்துஉறுப்பு தானத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.S. பிரகதீஸ்வரன் அவர்கள் பேசுகையில்உறுப்பு தானம்தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொடையாளர்படிவங்கள் வழங்கும் பணிகள் 2024 டிசம்பரில் தொடங்கப்பட்டதுஎன கூறினார்.

இந்த பிரச்சாரம் என்பது உறுப்புப் மாற்று அறுவை சிகிச்சைஆணையத்தின் (TRANSTAN) ஆதரவுடனும் தேசிய உறுப்பு மற்றும்திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு (NOTTO) ஆகியவற்றுடன்இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் விளைவு என்றுமகுறிப்பிட்டார்.  இந்தப் பரப்புரை மூலம் இந்தியாவிலும்உலகெங்கிலும் உள்ள ஆர்வமுள்ள தனிநபர்கள் தாமாக முன்வந்துஉறுப்பு தானம் செய்ய வழிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டதுஎன்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது

இதற்கான விழிப்புணர்வை திறம்பட ஏற்படுத்தும் வகையில் ஒருவிரிவான யுக்தி செயல்படுத்தப்பட்டது. ஒரு அர்ப்பணிப்புள்ள குழுதெரு நாடகங்கள்துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்மக்களிடத்தில் சிறப்புரைகள் வழங்குதல் உள்ளிட்ட பலவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தியதுஅதேநேரத்தில்இதை அதிகப்படியான மக்களை வேகமாக சேர்த்திடசமூக ஊடகங்கள் வழியாக ஒரு வலுவான டிஜிட்டல் பிரச்சாரம்மேற்கொள்ளப்பட்டது.

உறுதிமொழி அளிக்கும் செயல்முறையை எளிதாக்கஒரு பிரத்யேகஆன்லைன் இணைப்பு மற்றும் QR குறியீடுகள் உருவாக்கப்பட்டன.இவை சமூக ஊடகங்கள்சுவரொட்டிகள் மற்றும் முக்கிய பிரச்சாரஇடங்களில் பதாகைகள் மூலம் பரவலாகப் பகிரப்பட்டனஇதுஎளிதான டிஜிட்டல் பதிவுக்கு வழிவகுத்தது. ஆன்லைனில்அல்லாமல் நேரடியாகப் பதிவுசெய்ய விரும்புவோருக்குமருத்துவமனைகள்கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுநிகழ்வுகளில் நேரடியாக பதிவு படிவங்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பரப்புரைக்கு இந்தியா முழுவதும் இருந்து பெரும் வரவேற்புகிடைத்ததுஅத்துடன் சர்வதேச பங்களிப்புகளும் இருந்தனஉறுப்புதானம் செய்ய உறுதியளித்தோர் எண்ணிக்கையில்தமிழ்நாடு முன்னிலை வகித்ததுஇது ஸ்ரீ ராமகிருஷ்ணாமருத்துவமனை இந்தப் பகுதியில் ஏற்படுத்தி ஆழமான நம்பிக்கைமற்றும் விழிப்புணர்வைக் காட்டுகிறதுஅதற்கு அடுத்த இடத்தைகேரளா பெற்றது.

உறுதியளித்தவர்களில் பலரும் பல உறுப்புகளை தானம் செய்யவிருப்பம் தெரிவித்தனர்இதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர்முழுமையான உறுப்பு மற்றும் திசு தானத்திற்குத் விருப்பம்தெரிவித்தனர்சிறுநீரகம்கல்லீரல்இதயம்நுரையீரல் மற்றும்கணையம் போன்ற முழு உறுப்புகளுக்கான உறுதிமொழிகள்அதிகமாக இருந்தன. கண்பார்வை தானங்கள் குறிப்பிடத்தக்கஅளவில் அதிகமாக இருந்தன மற்றும் தோல் தானங்களும் முக்கியஇடம் பிடித்தன.

18-30 வயதுக்குட்பட்டோர அதிக எண்ணிக்கையிலானஉறுதிமொழிகளை அளித்தனர். வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன்அமைப்பின் நடுவர்கள் உறுப்பு தானம் உறுதியளித்தவர்களின்படிவங்கள் மற்றும் அவர்களின் விவரங்களை உன்னிப்பாகசரிபார்த்தனர். ஒரு விரிவான ஆய்வுக்குப் பிறகு சாதனையைஉறுதிப்படுத்தினர்.

சான்றிதழைப் பெற்ற பிறகுஎஸ்.என்.ஆர்சன்ஸ்அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. R. சுந்தர் அவர்கள்தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதைத  ொடர்ந்து அவர் கூறியது

இந்த அங்கீகாரம் உறுப்பு தானம் செய்ய உறுதி அளித்த 45,861தன்னார்வலர்களுக்கு சமர்ப்பணம் மற்றும் 3 மாதங்களில் இத்தனைபேரிடம் உறுப்பு தானம் எனும் உன்னத செயலை சேர்க்கவழக்கமான விழிப்புணர்வு முயற்சிகளுடன் தொழில்நுட்பம் தழுவியநவீன முயற்சிகளை சேர்த்துஅயராத உழைத்த அனைவருக்கும்தனது நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்தங்கள் முயற்சிக்கு தமிழக அரசின் அமைப்பின் மிகப்பெரிய ஆதரவுஇருந்தது. அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிஎன கூறினார்.

அதைத  ொடர்ந்து இன்று உலகில் உறுப்பு தானம்செய்பவர்களின் எண்ணிக்கையை சற்று உயர்ந்து வருகிறதுஎன்றாலும், பல்வேறு உறுப்புகளுக்காகக் காத்திருக்கும்நோயாளிகளின் எண்ணிக்கையும்உறுப்புக்கள் கிடைக்காமல்தங்கள் நாட்களை என்னும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாகஇருக்கிறது என்பதை நாம் அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுஎனவே இதைப் பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை என்றும் அயராது உழைக்கும் எனஅவர் உறுதிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமைசெயல் அதிகாரி திரு. C.V. ராம்குமார்தலைமை நிர்வாக அதிகாரிதிரு. D. மகேஷ் குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணாமருத்துவமனையின மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். S.அழகப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

இம்மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். S.அழகப்பன் அவர்கள்அனைத்து பிரமுகர்கள்கூட்டாளர்கள் மற்றும்பங்கேற்பாளர்களுக்கு, அவர்களின் வருகை மற்றும் ஆதரவிற்காகமனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *