March 14, 2026

காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா ஆதரவாளர்களின் இயக்க கொடி அறிமுக விழா

0
14635443-b806-4f82-b742-707284b266b0

காஞ்சிபுரம்,செப்.15:
காஞ்சிபுரத்தில் மதிமுகவிலிருந்து வைகோவால் நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளர்களின் இயக்க கொடி அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாள் விழா,இயக்க முன்னோடிகளுக்கு திராவிட ரத்னா விருதுகள் வழங்கும் விழா மற்றும் இயக்க கொடி அறிமுக விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.இரு அமர்வுகளாக நடைபெற்ற இவ்விழாவில் முற்பகல் நிகழ்வுக்கு ராமேசுவரத்தை சேர்ந்த கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர்கள் ஊனை.பார்த் தீபன்,சு.செல்வப்பாண்டியன்,எஸ்.கௌரிகுமார்,க.இளவழகன்,ஜிஆர்பி ஞானம்,க.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.வளையாபதி வரவேற்று பேசினார்.முதல் அமர்வில் மல்லை சத்யாவின் ஆதரவாளர்களாகவும் மதிமுகவில் நிர்வாகிகளாக இருந்தவர்கள் பலரும் பேசினார்கள். அரியலூர் மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம் இயக்கத்துக்கு நிதிஉதவியாக ரூ.1.50 லட்சம் வழங்கினார். முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மல்லை சத்யா உட்பட அவரது ஆதரவாளர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்பாகவுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அனைவரும் ஊர்வலமகாக கூட்டம் நடபெறும் இடத்துக்கு வந்தனர்.
}பிற்பகல் அமர்வு பேராசிரியர் அப்துல்காதர் அவர்களது தலைமையில் நடைபெற்றது.இயக்க முன்னோடிகளான நாஞ்சில் சம்பத்,திருப்பூர்.சு.துரைச்சாமி,டிஆர்ஆர்.செங்குட்டுவன்,புலவர் செவந்தியப்பன், பொடா.அழகுசுந்தரம்,வல்லம் பஷீர்,இந்தோனேஷியா விசாகன்,வாசுகி பெரியார்தாசன் ஆகியோருக்கு திராவிட ரத்னா விருதுகள் மல்லை.சத்யாவால் வழங்கப்பட்டது.அண்ணாவின் மார்பளவு உருவம் பொறிக்கப்பட்ட சிலை விருதாக வழங்கப்பட்டது.அந்த விருதில் திராவிட குடியரசு விடுதலைக் கழகம் என எழுதப்பட்டிருந்தது.விருது மதிமுக நிறுவனத் தலைவர் வைகோவுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விருதினை மல்லை.சத்யாவுக்கு நிர்வாகிகள் வழங்கினார்கள்.வை.கோ. நாளும்,தேதியும் சொன்னால் அந்த தேதியில் அவருக்கு நேரில் இந்த விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
விழாவில் இயக்க கொடியை கட்சியின் முன்னோடிகள் அறிமுகப்படுத்தினார்கள்.கருப்பு,சிவப்பு நிறத்தில் 7 நட்சத்திரங்களை உள்ளடக்கியதாக கொடி வடிவமைக்கப்பட்டு மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து இயக்க நிர்வாகிகளாக 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அக்குழு கூடி முடிவு செய்து வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நீதிக்கட்சி உருவான நாளன்று கட்சியா அல்லது அமைப்பா என்பது தெரிவிக்கப்படும் என மல்லை.சத்யா தெரிவித்தார்.அதே நாளில் அதன் பெயரும்,நிர்வாகிகள் பெயரும் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.நிறைவாக காஞ்சிபுரம் மாநகர செயலாளர் வி.வெங்கடேசன் நன்றி கூறினார்.}விழாவில் மதிமுகவில் மாவட்ட செயலாளர்களாக பணியாற்றிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *