“மல்லை சத்யா” செய்தியாளர் … நவம்பர் 20 அரசியல் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும்
ராமதாஸ் அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுவதுபோல், ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார் – மல்லை சத்யா
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா,
வைகோ மகனுக்காக கட்சியிலுருந்து நீக்கிய பின்னர் எதிர்கால பயணம் அரசியல் இயக்கமாக அல்லது சங்கமாகவே இருக்கலாமா என்று ஆலோசிக்க 15 பேர் கொண்ட குழு அமைத்தோம். அந்த குழு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் நவம்பர் 20 ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில்
எங்கள் பயணம் அரசியல் பயணமா அல்லது சங்கமா என்பதை அறிவிக்க உள்ளோம் . அரசியல் இயக்கமாக இருந்தாலும் அதன் பெயர் எனக்கு தெரியாது
அவை தீர்மானிக்க அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழுவினருக்கு மட்டுமே புதிய அரசியல் இயக்கத்தின் பெயர் தெரியும். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்க கூடாது என உறுதியாக இருக்கிறோம்
வைகோ மகன் துரை வைகோ அரசியல்ப்படுத்தப்படாதவர் ,ஜனநாயக பண்பற்றவர்களாக உள்ளார்
துரை வைகோவிற்க்கு மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது அதனால் பாஜகவுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார்
கார்ப்பரேட் அரசியல் வாதியாக துரை வைகோ இருக்கிறார்.
துரை வைகோ மீது இன்னும் கட்சியில் பலர் எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர்
ராமதாஸ் அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுவதுபோல், ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார்
திமுகவிலும் வாரிசு அரசியல் உள்ளதே என்ற கேள்விக்கு, திமுகவில் அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு இருக்கிறது
ஆனால் துரை வைகோவிடம் அவை இல்லை என்றார்
மதிமுகவில் இருந்து வெளியேறிய பின்னர் என்னுடன் இருந்த தோழர்கள் அனைவரும் தாய் கழகமான திமுகவில் இணைய வேண்டும் என்றே விரும்பினர்.
மதிமுக நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைவதற்கு வைகோ தடையாக இருந்தார்.
கூட்டணி குறித்து தற்போது நாங்கள் சிந்திக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்.
கூட்டணியில் அணி மாறிக்கொண்டே இருந்ததால் மதிமுக பலவீனமானது
சரியான நேரத்தில் தவறான முடிவு எடுக்கும் தலைவராக வைகோ இருந்தார் என்பதை மறுப்பதற்கு இல்லை
வைகோ போதைக்கு எதிராக நடைபயணம் மேற்கொள்ள உள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த மல்லை சத்யா, துரை வைகோ, சிகரெட் கம்பெனி தற்பொழுது நடத்தாமல் உறவினரிடம் கொடுத்து விட்டதாக சொன்னாலும் அதனுடைய வருமானம் துரை வைகோவிற்கு தான் வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருள் எதிரான நடைப்பயணம் என்றால் திமுக எதிராக போகிறாரா என கேள்வி எழுப்பினார்.
மாமல்லபுரத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. துரை வைகோவும் அரசியலில் பயிற்சி விமானி போன்று தான்.
தமிழக வெற்றிக் கழகம் கூட்டத்தை அரசியல்படுத்த வேண்டும் காட்டாறு போல் வரும் கூட்டத்தை
ஜனநாயக ரீதியாக அரசியல் படுத்தினால் ஜீவானத பிரச்சனைகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்
