March 14, 2026

டென்வர் ஃபார் மென் மற்றும் ஷாருக்கான் இணைந்து புதிய ‘சென்ட் ஆஃப் சக்ஸஸ்’ 

0
IMG_0451

சென்னை நவம்பர் 2025:  இந்தியாவின் முன்னணி மற்றும் அதிகவிருதுகள் பெற்ற ஆண்களுக்கான அழகுபடுத்தும் பிராண்டுகளில்ஒன்றான டென்வர் ஃபார்மென், பாலிவுட் ஐகான் ஷாருக்கான்இடம்பெறும் அதன் புகழ்பெற்ற சென்ட் ஆஃப் சக்ஸஸ்‘ (வெற்றியின்வாசனைஎன்ற விளம்பரப்படத்தின் அடுத்த அத்தியாயத்தைவெளியிட்டுள்ளது. இப்புதியபடம், “தி ரியல் சென்ட் ஆஃப் சக்ஸஸ்”என்ற பிராண்டின் நீண்டகால தத்துவத்தை ஆழமான இடத்திற்குஎடுத்துச்செல்கிறது – வெற்றியை அடைவதற்கான பயணத்திற்கு அப்பால்ஒருவர் அதை எவ்வாறு கொண்டு செல்கிறார் என்பதை ஆராய்வது வரை. வெற்றி உங்கள் தலைக்குச் செல்லக்கூடாதுஆனால் உங்கள்இதயத்திற்குச் செல்லவேண்டும்” என்ற சிந்தனையைச் சுற்றிகட்டமைக்கப்பட்ட இந்த விளம்பரப்படம், உண்மையான வெற்றி நீங்கள்எவ்வளவு உயரத்திற்கு உயர்கிறீர்கள் என்பதில் இல்லை, ஆனால் நீங்கள்உயர்ந்தபின் எவ்வளவு நிலைத்த மனப்பாங்குடன், பணிவுடன் இருக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது என்ற டென்வரின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

இந்த விளம்பரப்படம், நுட்பமான படிநிலைகளும் ஆணவமும்பெரும்பாலும் மனித நடத்தைக்குள் மெல்ல நுழையும் ஒரு அன்றாடசூழ்நிலையை சித்தரிக்கிறது, உண்மையானதும் தொடர்புடையதுமான ஒரு தருணமாக. மிகைப்படுத்தப்பட்ட சைகைகளோ உபதேசங்களோ இல்லாமல், ஷாருக்கான் தன்னைத்தான் ஒரு பிரதிபலிப்பு குரலாக மாற்றிக் கொண்டு, வெற்றி என்பது அந்தஸ்தை உறுதிப்படுத்துவது பற்றியதுஇல்லை, மாறாக கருணை, பணிவு, கனிவு ஆகியவற்றுடன் இருப்பதுபற்றியது என்பதை பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகிறார். இந்தக் கதையம்சம் நெருக்கமானதும், உண்மையானதும் ஆகும் – நவீனஆசைகளுக்கு ஏற்ற ஒரு கண்ணாடி, வெற்றியை அதற்கு தக்க இடத்தில்வைத்து, இதயத்தில் இருக்க அனுமதிக்க அனைவரையும்வலியுறுத்துகிறது.

டென்வரைப் பொறுத்தவரை, இந்த சிந்தனை வளர்ச்சி அதன் பிராண்ட்பயணத்தில் ஒரு இயல்பான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விடாமுயற்சி, பொறுமை, கடின உழைப்பு ஆகியவற்றால் உருவாகும் உண்மையான வெற்றியின் பண்பை நீண்டகாலமாகப் போற்றிவந்த இந்த பிராண்டு, இப்போது ஒருவர் வெற்றியை அடைந்த பின் அவரை உண்மையில் வரையறுக்கும் அம்சங்களை முன்னிறுத்த விரும்புகிறது. இந்த ஆழமானஆய்வு டென்வரின் அடையாளத்திற்கு உணர்ச்சிபூர்வமான ஒரு தளத்தைக் கூட்டுகிறது. வெறும் பராமரிப்பு தயாரிப்புகளுக்கான பிராண்டாக அல்லாமல், குணத்துடன் நம்பிக்கையையும், உள்ளார்ந்த பொருளுடன் ஸ்டைலையும் ஊக்கப்படுத்தும் ஒரு பிராண்டாக அதன் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

டென்வருடனான ஷாருக்கானின் தொடர்பு இந்த தத்துவத்தின் சக்திவாய்ந்த உருவகமாகத் தொடர்ந்து உள்ளது. எளிய தொடக்கத்திலிருந்துஉலகப் புகழ்பெற்ற நட்சத்திர அந்தஸ்து வரை கட்டமைக்கப்பட்ட அவரதுதனிப்பட்ட பயணம், மில்லியன் கணக்கான மக்களின் அபிலாஷைகளைபிரதிபலிக்கிறது. இருப்பினும், உண்மையிலேயே எதிரொலிப்பது அவரதுபுகழ்அல்ல, மாறாக அவரது பணிவு – வாழ்க்கையின் அனைத்துநிலைகளிலும் உள்ள மக்களை அவர் நடத்தும் அரவணைப்பு மற்றும்மரியாதை. அவரின் இத்தகைய நம்பகத்தன்மையே அவரை டென்வரின்செய்திக்கு சரியான கதைசொல்லியாக ஆக்குகிறது – உண்மையானவெற்றிகைதட்டல்களில் இல்லை, ஆனால் உங்கள் சாதனைகளைஎவ்வளவு பணிவு, அழகு மற்றும் நயத்துடன் தாங்கிக் கொள்கிறீர்கள்என்பதில்தான் உள்ளது.

இந்த விளம்பரப்படம் குறித்து கருத்து தெரிவித்த எச்எஸ்பிஎல்(புரொமோட்டர் கம்பெனி ஆஃப் டென்வர் ஃபார்மென்நிர்வாகஇயக்குநரும் தலைவருமான திருசௌரப்குப்தா அவர்கள் கூறியதாவதுவெற்றி என்பது ஒரு இலக்கு அல்லஅது ஒரு ஒழுக்கம்டென்வரில்ஒருவர் எவ்வளவுஉயரத்திற்கு உயர்கிறார் என்பது அளவுகோல் அல்லஉயர்ந்த பின் அவர் எவ்வளவு ஆழமாக வேர் பதித்தபடி இருப்பார் என்பதே உண்மையான அளவுகோல் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். இந்த விளம்பரப்படம் அந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு — வெற்றி என்பது அதிகாரம் அல்லது பதவி பற்றியது அல்லஇருப்புகருணைபச்சாதாபம் பற்றியது என்பதை நினைவூட்டுகிறதுஷாருக்கானுடன்நாங்கள் இந்த எண்ணத்தை செயற்கை இல்லாமல்உண்மைத் தன்மையுடன் உயிர்ப்பிக்கிறோம். அவருடைய பயணம்நாங்கள்நிலைநிறுத்திக் கொள்கிற மதிப்புகளை வெளிப்படுத்துகிறது பணிவுடனான பொறுமைஇதயத்துடனான சாதனை. ஏனெனில் இறுதியில்மனிதர்களின் வாழ்க்கையைத் தொடாத வெற்றி எதுவும் உண்மையான வெற்றியாக இருக்க முடியாது.”

இந்த விளம்பரப்படத்தின் மூலம், டென்வர் ஃபார்மென், நேர்மை, நோக்கம், பணிவு கொண்ட ஆண்களைப் போற்றும் ஒரு பிராண்டாகஅதன் பாரம்பரியத்தை வலுப்படுத்துகிறது. அதன் பிரீமியம் வாசனைதிரவியங்கள் மற்றும் அழகுபடுத்தும் அத்தியாவசியப் பொருட்களின்வரிசை, காட்சியை விட உள்ளார்ந்த மதிப்பை முன்னிறுத்தும், மற்றும்வெற்றி என்றால் உண்மையான மணம் போல அமைதியாக நீடித்து, அதிகாரத்தால் அல்ல, இருப்பின் அமைதியால் பேசுவது சிறந்தது என்று நம்பும் நவீன இந்திய ஆண்களிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது.

இணைப்பு: https://www.instagram.com/reel/DQgq8vsjK7u/?igsh=MXZ2aW43eHNyMDk3aQ==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *