March 14, 2026

ஜோய்ஆலுக்காஸ்பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோபிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை வேலூரில் நடைபெறுகிறது

0
560fb15a-bc70-4128-a069-94bfacbe90df

வேலூர், 21 பிப்ரவரி 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், பிப்ரவரி 21, 2026 முதல் வேலூர் ஷோரூமில் நடத்தும் தனது ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ வாயிலாக தமிழ்நாட்டை வைர அழகில் மின்னச் செய்திட தயாராகி வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கண்காட்சி, வைர நகைகளில் கைவினைத்திறன், நேர்த்தி மற்றும் புதுமையின் அனுபவத்தை இணைக்கும் மறக்க முடியாத ஒரு கொண்டாட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறது.

அற்புதமான பிரைடல் கலெக்ஷன்கள் முதல் சமகால படைப்புகள், காலத்தால் அழியாத பாரம்பரியத்தை நவீன அழகியலுடன் இணைக்கும் படைப்புகள் வரை இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு தலைசிறந்த படைப்பு! கண்காட்சி காலத்தில் மட்டுமே இந்த வைர நகைகள் கிடைக்கும்.

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜோய் ஆலுக்காஸ் குறிப்பிட்டதாவது ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ வைரங்களின் நீடித்த வசீகரத்திற்கும், நகை வடிவமைப்பில் முழுமைக்கான எங்கள் அடையாளத்திற்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் நிகழ்ச்சி. வேலூர் மாநகரம் எங்கள் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. பண்டிகை காலத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி வாடிக்கையாளர்களுக்கு அழகான, தனித்தத்துவம் வாய்ந்த, கைவினைத் திறனை சிறந்த முறையில் பிரதிபலிக்கும் நகைகளின் டிசைன்களை கண்டறிய ஒரு பிரத்யேக வாய்ப்பை வழங்கும்’ என்று தெரிவித்தார்

இந்த கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில், கண்காட்சி காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்குமேலுள்ள ஒவ்வொரு வைர நகை பர்ச்சேஸ்க்கும் வாடிக்கையாளர்கள் ஒரு இலவச தங்க நாணயத்தைப் பெறுவார்கள், இது ஷாப்பிங் அனுபவத்திற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கும்.

‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ வேலூர் ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில் மார்ச் 8, 2026 வரை பிரத்தியேகமாக நடைபெறும். ஒவ்வொரு ஆபரண தயாரிப்பும் ஆடம்பரம், காதல் மற்றும் காலத்தால் அழியாத வசீகரத்தின் கதையைச் உங்களுக்குச் சொல்வது உறுதி. வைரங்களின் அழகிய உலகத்தை நீங்கள் உணர்ந்து உவகைகொள்ள தங்களை வரவேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *