March 14, 2026

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.

0
IMG_8972

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னை, மதுரை, திண்டுக்கல் என அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் துரைராஜ் நகரில் உள்ள வீடு், திண்டுக்கல் மாவட்டம் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஜ.பி. செந்தில்குமார் வீட்டிலும் அதிகாலை முதல் தீவிர சோதனை நடைபெற்று வருகின்றன.

தேர்தலுக்கு குறுகிய காலங்கள் உள்ள நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் பழைய வழக்குகளை சுமார் 8 பிரிவுகளாக பிரிவுகளாக பிரித்து வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக சோதனைகளில் ஈடுபடுவது வழக்கமானது.

2026 இல் தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், தற்போது அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது நெருக்கமானவர்களின் தொடர்புடைய இடங்களில் சனிக்கிழமை அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *