October 2, 2026

தொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவுத் தீர்வு: தமிழகத்தில் முறைப்படி செயல்பாட்டைத் தொடங்கியது BJMC

0
4357b8c8-44e0-474b-82d4-beecac45c397

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தொழிலாளர்கள் அமைப்பான பாரதிய ஜனதா மஜ்தூர் செல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

விழாவின் தொடக்கமாக அமைப்பின் கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின இவ்விழாவிற்கு பாரதிய ஜனதா தொழிலாளர் அமைப்பின் தேசியத் துணைத் தலைவர் மூனாவரி பேகம் முன்னிலை வகித்தார் மாநிலத் தலைவர் அருள் குமரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா தொழிலாளர் அமைப்பின் தேசியத் தலைவர் அர்ணாப் சட்டர்ஜி கலந்துகொண்டார் அவர் புதியதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து அமைப்பின் பணிகள் குறித்தும் உரையாற்றினார்

மாநில மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்குப் பதவிகள் வழங்கப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன

மாநிலத் தலைவர் அருள் குமரன் பேட்டி

தொழிற்சங்கம் இந்தியா முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ்நாட்டிலும் இதன் கிளை தொடங்கப்பட்டுள்ளது
மாநிலத்தில் நிலவும் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளை உடனடியாக அணுகி விரைவான தீர்வு காண்பதே இச்சங்கத்தின் முதன்மை இலக்காகும் எனவும்
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஏராளமான தொழிற்சங்கங்கள் இயங்கி வந்தபோதிலும் அவை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குச் சரியான அல்லது நிரந்தரமான தீர்வுகளைப் பெற்றுத் தருவதில்லை குறிப்பாக தொழிலாளர்களின் நிலையை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு அவர்கள் முழுமையாகக் கொண்டு செல்வதில்லை
மத்திய அரசு தொழிலாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் விளிம்புநிலையின்றி சென்று சேர BJMC தீவிர ஏற்பாடுகளைச் செய்யும்
மேலும் இத்திட்டங்கள் குறித்து தொழிலாளர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்

இதுமட்டுமன்றி தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதுடன் பல்வேறு தனியார் நிறுவனங்களில் தற்போது எழுந்துள்ள தொழிலாளர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்லப்படும் என்று அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *