March 14, 2026

District

சமய, சமுதாயப் பணிகளைப் பாராட்டி காஞ்சி மடம் ” பாரதிய கலாச்சார சேவா மணி” என்ற விருதை ஸ்ரீ ஜெகதீஷ் கடவுள் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது.

தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மை காக்கும் என்பது வேத வாக்கியம், ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை...

காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா ஆதரவாளர்களின் இயக்க கொடி அறிமுக விழா

காஞ்சிபுரம்,செப்.15:காஞ்சிபுரத்தில் மதிமுகவிலிருந்து வைகோவால் நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளர்களின் இயக்க கொடி அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.காஞ்சிபுரத்தில் தனியார் திருமண...

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள -தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் அவர்கள் குறித்த சில தகவல்கள்.

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது காவல் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கடராமன், கூடுதல் பொறுப்பாக டிஜிபியாக...

உன்னையே நம்பி இருந்த உடன் பிறப்ப இப்படி எமாத்திட்டியே டாக்டர்.அழகுதமிழ்செல்வி, M.D.,

நான் திருமதி. டாக்டர். அழகு தமிழ் செல்வி, M.D., மறைந்தமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐசரி வேலனின்இரண்டாவது மகள், , டாக்டர் ஜெ.அருள் அவர்களின் மனைவியும், திரு. ஐசரி கணேஷின் இரண்டாவதுசகோதரியாகிய நான் சென்னை மயிலாப்பூரில் உள்ளசெல்வி ஸ்கேன் மையத்தின் ஸ்கேன் மருத்துவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறேன். என் தந்தை திரு. ஐசரி வேலன் அவர்கள் 14-05-1987 அன்று காலமானார். அப்போதைய தமிழக முதல்வராகஇருந்தடாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 07-11-1987 அன்றுஎங்கள் வேலன் குடும்பத்திற்கு மிகப் பெரிய தொகையைவழங்கினார்.  அந்தக் குடும்பப் பணம் 30-12-1987 அன்று கடன்களைத்தீர்க்கப் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள பணம் மற்றும்நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்த நிலங்களில் (அப்பா அம்மாவின் சொத்து) 24 அடுக்குமாடி குடியிருப்புகள்கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு, பெறப்பட்ட பணத்தின்மூலம், “VAEL’S EDUCATIONAL TRUST” ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் மைலாப்பூர், பல்லாவரம் மற்றும்ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு நிலங்கள் வாங்கப்பயன்படுத்தப்பட்டது.  டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் குடும்பத்திற்க்காககொடுத்த பணத்தில், எங்கள் குடும்ப கடனை அடைத்துமீதம் உள்ள  தொகை  மற்றும் அப்பா அம்மாவின் சொத்தைவைத்துVAEL’S EDUCATIONAL TRUST  ஆரம்பித்தோம். இதைதிரு.ஐசரி கணேஷ் அண்ணன் அவர்கள் பல ஊடகங்கள்மற்றும் , நேர்காணல்களில் ஒப்புக்கொண்ட உண்மை. எனவே  வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் குடும்பசொத்தின் மூலதனமாக வந்தது தான், டாக்டர்.ஐசரிகணேஷ் சுயமாக சம்பாதித்தது இல்லை.  இதற்கிடையில் 1992 ஆம் ஆண்டு “VAEL’S EDUCATIONAL TRUST” நிறுவப்பட்டது மற்றும் 06-07-1992 அன்று ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை பத்திரம்உருவாக்கப்பட்டது, எனது சகோதரர் டாக்டர் ஐசரி கணேஷ்நிர்வாக அறங்காவலராகவும், எனது தாயார் மற்றும் எனதுமூத்த சகோதரி திருமதி மகாலட்சுமி மற்றும் நான் வாழ்நாள்அறங்காவலராக இருக்கிறோம், இது வாழ்நாள் முழுவதும்தொடரும்.  ...

தமிழ்நாடு காவல்துறை மற்றும் இந்திய காவல்துறை அறக்கட்டளைக்கும் இடையிலான துறை சார்ந்தசீர்திருத்தத் திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாடு காவல்துறையில் துறை சார்ந்த சீர்திருத்தத்திட்டம் உருவாக்க  தமிழ்நாடு காவல்துறைக்கும் இந்தியகாவல் அறக்கட்டளைக்கும் இடையே இன்று 22.08.2025 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது, இத்திட்டமானது ஆராய்ச்சி/திறன் மேம்பாடு உள்ளிட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்குதமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய காவல் அறக்கட்டளை ஒரு தன்னிச்சையான, பல்துறை வல்லுநர்கள் அடங்கிய முதன்மையான சிந்தனைக்குழுவாகும், இது காவல் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்கள்   (பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) அடங்கியபுகழ்பெற்ற கல்வி ஆராய்ச்சியாளர்கள், பாதுகாப்பு, குடிமைப்பணி அதிகாரிகள் அடங்கிய குழுவால்நிர்வகிக்கப்படுகிறது, இந்தியாவில் காவல் பணியைமேம்படுத்துவதற்காக இந்த அமைப்பு அர்ப்பணிப்புடன்செயல்படுகிறது.    இந்த அமைப்பு திரு. N. ராமச்சந்திரன், முன்னாள் காவல்துறை இயக்குநர், மேகாலயா, என்பவரால்நிறுவப்பட்டதாகும். தற்போது திரு. ஓம் பிரகாஷ் சிங் இ.கா.ப.,(முன்னாள் காவல்துறை இயக்குநர் , உத்திரபிரதேசம், CISF மற்றும் NDRF) இதன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரியாக உள்ளார்.     டாக்டர் இஷ் குமார் இ.கா.ப.,  (முன்னாள் காவல்துறை இயக்குநர், விஜிலென்ஸ், தெலுங்கானா மற்றும் காவல்துறை இயக்குநர் NCRB), துணைத் தலைவராகவும், துறை சார்ந்த சீர்திருத்தத்  திட்ட இயக்குநராகவும் உள்ளார். தமிழ்நாடு காவல்துறை தனது சமூக ஈடுபாட்டின் மூலம்குடிமக்களுக்கு சேவையை உறுதிசெய்துவருகிறது..பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குதல் மற்றும் காவல்நிலையங்களில் குறை தீர்க்கும் நடைமுறையை மேம்படுத்துதல்ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் பொதுமக்களிடையே நம்பிக்கையை வளர்த்து சமூகத்திற்கு சிறந்த சேவை செய்ய வழிவகைசெய்கிறது. பெண்கள்பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும்காவல்துறையின் பணி சூழலை  மேம்படுத்துதல் ஆகியவற்றில்இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்தும்.  இந்த துறை சார்ந்த சீர்திருத்தத் திட்டமானது ஆவடிகாவல் ஆணையரகத்தில் உள்ள 15 காவல் நிலையங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 15 காவல்நிலையங்களிலும் நடத்தப்படும். இத்திட்டத்தில்புகார்தாரர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டவர்கள், குடிமக்களில் சேவை வேண்டுவோர், அரசுசாரா நிறுவனங்கள், அரசு மற்றும் காவல்துறை பணியாளர்கள்உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அடங்கிய பொது ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் காவல்துறை கவனம் செலுத்தப்பட வேண்டிய  பகுதிகளைஅடையாளம் காணவும், காவல்நிலையாணை கையேட்டில்மாறுதல்கள் கொண்டுவரவும், காவல் பணியாளர்களுக்குபயிற்சி அளிக்கவும் திட்டமிடபட்டுள்ளது.  இத்திட்டம்  ஒருவருடத்திற்கு அமலில் இருக்கும், பொதுவான நபர்களைகொண்டு தணிக்கை மேற்கொள்ளப்படும். அதன்அடிப்படையில், முன்மொழியப்பட்ட  பரிந்துரைகள்தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும்விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும்தெலுங்கானா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கான மாநில தொடர்பு அதிகாரியாகமுனைவர்.  பா. சாமூண்டிஸ்வரி இ.கா,ப., காவல்துறைதலைவர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறைஅவர்களும்  மற்றும் மேற்பார்வையாளராக ஓய்வு பெற்ற காவல்கண்காணிப்பாளர் திரு. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களும்நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக 5 வது காவல்ஆணையரின் உறுப்பினராக இருந்த  ஓய்வு பெற்ற, திரு. ராதாகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்ட துவக்க விழாவில் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப.,தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அவர்களுடன் காவல்துறை தலைமை அலுவலக உயர்அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.